நாமக்கல் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது மக்கிரிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவி(54), செல்வராஜ்(51), கருப்பசாமி(41), மாதேஸ்வரன்(39), வினோத்குமார்(37) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 15,970 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.