உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 33.89 கோடியாக உயர்ந்திருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. பிரேசில் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.