Categories
மாநில செய்திகள்

இந்த நம்பர் அமுக்கினா….. மொத்த பணமும் சுவாகா தான்….. காவல்துறை எச்சரிக்கை…!!

ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா என்ற கொடிய நோயை ஒருபுறம் கட்டுப்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஆன்லைன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் எனில், நமது ரகசிய குறியீட்டு எண் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

தற்போது இந்த OTP எண்  இல்லாமலேயே பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்த காவல்துறையினர் ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதன் படி, உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி போல் பேசி,

உங்கள் மொபைல் போனில் குறிப்பிட்ட நம்பரை டயல் செய்ய சொன்னால், அதை டயல் செய்ய வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மொபைலுக்கு வரக்கூடிய அனைத்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் கொள்ளையர்கள் அவர்களது மொபைல் எண்ணிற்கு வரவழைத்து அதன் மூலம் OTP மெசேஜ்களையும் பெற்று வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

Categories

Tech |