தமிழ் சினிமாவில் எப்போதுமே வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிறைய திரைப்படங்கள் ரிலீசாகும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகும் படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை கட்டாகுஸ்தி, டிஎஸ்பி, தெற்கத்திவீரன், மஞ்ச குருவி போன்ற திரைப்படங்கள் ரிலீசாகின்றன.
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், வரலாறு முக்கியம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாகின்றன. அகிலன், லத்தி போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.
ஏற்கனவே ரிலீசாக வேண்டிய தமிழரசன், இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களும் இந்த மாதத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பிசாசு 2, டிரைவர் ஜமுனா, ஏழு கடல் ஏழுமலை, இடி முழக்கம் போன்ற திரைப்படங்களையும் இந்த மாதத்தில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.