இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் நடத்தின.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் அதிகமானால் குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் 2ஆம் இடத்தில் இருந்தது.
கலக்கிய தமிழகம்:
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டது. அதிக பரிசோதனை மையங்கள் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்ற தமிழகம், மத்திய அரசு கொரோனா சோதனைக் கருவிகளை ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆர்டர் செய்தது. தமிழக முதலமைச்சரும் அடிக்கடி ஆய்வு கூட்டங்களை நடத்தி தடுப்பு பணிகளில் எந்த குறையும் இல்லாத அளவுக்கு கொரோனா போரை முன்னின்று நடத்தியது.
தமிழகத்துக்கு பாராட்டு:
கொரோனா ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீடிப்பதற்கு முன்பாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் சுகாதார பணிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதில்முதல்வர் கேட்ட அதிக ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை தமிழகத்துக்கு தருவதாகவும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.
யாரும் எடுக்காத முயற்சி:
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் ஒடிசா மாநிலம் முன்னிலை வகித்து வந்ததையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனவை கட்டுப்படுத்துவது எப்படி? ஊரடங்கு எப்படி நடைமுறைப்படுத்துவது? போன்ற பல்வேறு விஷயங்களை தமிழகத்திற்காக கேட்டறிந்தார். எந்த முதல்வரும் இப்படி எடுக்காத முன்மாதிரியை நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வந்தார்.
அடுக்கிய திமுக:
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு மீது எதிர்க் கட்சியான திமுக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், அரசு மெத்தனமாக செயல்படுகின்றது. மத்திய அரசிடம் கூடுதல் நிதியை கேட்கவேண்டும். அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு கொடுங்க. ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலைக்கு ஏன் வாங்குனீங்க ? என்றெல்லாம் அதிமுக மீது குறைகளை அடுக்கியது.
வெகுண்டெழுந்த முதல்வர்:
திமுகவின் விமர்சனகள் குறித்து பதிலளித்த தமிழக முதல்வர், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு அனைவரும் டாக்டர்களா? கொரோனா விவகாரம் மருத்துவர்களிடம் தான் பேசவேண்டும் . இங்கு அரசியல் கட்சியினர் அரசியல் செய்வதற்கு இடமில்லை. எங்களுக்கு மக்களின் உயிர் தான் முக்கியம். சும்மா சும்மா அறிக்கை விடாதீங்க. இங்க ஒரு குறை, அங்க ஒரு குறைன்னு எதாவது குற்றம் சொல்லி இப்படி நேரத்திலையும் எதிர்க்கட்சி அரசியல் செய்வது சரியில்லை என்று திமுக விமர்சனத்திற்கு வெகுண்டெழுந்து பதிலடி கொடுத்தார்.
வசமாக பயன்படுத்திய திமுக:
இந்த நிலையில்தான் தமிழக அரசு இன்று முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உத்தரவை பிறப்பித்தது இந்த வாய்ப்பை திமுக அதிமுகவுக்கு எதிராக அப்படியே பயன்படுத்தியது. இன்று திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கருப்பு சின்னம் அணிந்து வீட்டிற்கு வெளியே நின்று கொரோனா ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம் என முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.
கோபத்தில் பெண்கள்:
கொரோனா தடுப்பு பணிகளை எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருந்த நிலையில், அதிமுகவின் செல்வாக்கு அதன் செயல்பாடுகளால் கூடிக்கொண்டே சென்ற நிலையில் தற்போது மதுக்கடைகளை திறக்கலாம் என்ற அரசின் முடிவால் இல்லத்தரசிகள் கடும் கோபத்தில் உள்ளார். மக்கள் அனைவரும் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கின்ற நிலையில் இப்படி மதுக்கடைகளை திறந்து விடுவதால் வீட்டில் கூடுதலாக பிரச்சனை மேலோங்கும் என்று பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தலைகீழாக சரிந்த செல்வாக்கு:
கடந்த காலங்களில் விவசாயிகள் சார்ந்து அரசு பிறப்பித்த உத்தரவு, பல சலுகை அறிவிப்புகள் தமிழக முதல்வர் எட்டப்பாடியாரை நல்ல செல்வாக்கு மிக்க தலைவராக உயர்த்தியது. அதே போல கொரோனா தடுப்பு பணிகள் உலகிலே சிறந்த முதல்வர் என்ற வகையில் எடுத்துச் சென்றன. சமூக வலைதளத்தில் ஹேஷ்டாக் பறந்தது. ஆனால் தற்போது எடுத்துள்ள மதுக்கடை திறப்பு உத்தரவு எட்டப்பாடியில் அரசியல் செல்வாக்கை தலைகீழாக சரிந்துள்ளது ஆளும் அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
https://twitter.com/VigneshMathaiya/status/1248521740629598208
இன்று காலை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்கப்பட்டது #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. இவ்வளவு நாட்களாக சேர்ந்து வைத்தருந்த ஒட்டுமொத்த செல்வாக்கும் அடியோடு சரிந்துள்ளதால் எட்டப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. போதாக்குறைக்கு திமுக வேற எதையாவது சொல்லிக்கொண்டு இருந்தது தற்போது அதிமுகவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/AsianInquisitor/status/1258228164670578689