53 நாடுகளில் வாழும் 3036 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 25 பேர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 97 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5 லட்சத்து 23 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. அமரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபடியாக அமெரிக்காவில் இதுவரை 28,554 பேர் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில் 19,130 பேர், இத்தாலியில் 21,645 பேர், பிரான்ஸ் நாட்டில் 17,167 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்கா, சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 53 நாடுகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை தருகிறது.