Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!”.. அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க மக்களுக்கு தற்போது வரை 37.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா தான், உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில்  இருக்கிறது. நாட்டில், கொரோனாவால் அதிக மக்கள் உயிரிழந்தனர். எனவே, அதிபர் ஜோ பைடன், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்.
தற்போது, நாட்டில் பைசர்/பையோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அங்கு தற்போது வரை, 37,44,88,924 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, வெள்ளிக்கிழமை அன்று, 37,35,16,809 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. எனினும், அமெரிக்க சுகாதாரத்துறை தற்போது வெளியிட்ட தகவலின்படி, 20,69,08,710 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 17,59,68,266 நபர்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருப்பதாக, தெரியவந்துள்ளது.

Categories

Tech |