காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முயற்சித்த இளைஞன் 40 மணிநேரம் உண்ண உணவும் அருந்த தண்ணீரும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயதான பாஸ்கல் தனது ஆறு நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் ஒரு வாரகாலம் விடுமுறையை கழிப்பதற்காக பயணம் மேற்கொள்ள தயாராகி உள்ளார். ஆனால் பயணம் மேற்கொண்ட அன்று அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து விமான ஊழியர்கள் விமானம் பல்கேரியா வழியாக செல்வதால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது என கூறி அவரையும் அவர் நண்பர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களும் 150 பிராங்குகள் கட்டணம் செலுத்தி அவசர பாஸ்போர்ட் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அதை நிராகரித்து பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். இந்நிலையில் பல்கேரிய தலைநகர் சோபியாவில் மற்றொரு அதிர்ச்சியை பாஸ்கல் சந்தித்தார்.
சோபியா விமானநிலையத்தில் பாஸ்கர் தடுத்து நிறுத்தப்பட்டு காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மீதமுள்ள நண்பர்கள் தலையிட்டால் யாரையும் பயணத்தை முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் என மிரட்டியுள்ளனர். அதனால் பாஸ்கல் மட்டும் விமான நிலையத்தில் உள்ள தடுப்புக்காவலில் தனியாக விடப்பட்டுள்ளார். நண்பர்கள் அனைவரும் ஏதென்ஸ்க்கு போய் சேர்ந்த நிலையில் பாஸ்கல் அந்த அலுவலத்தில் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர் நான்கு மணி நேரத்திற்கு பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அவர் வேறொரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் . அதுவரை பாஸ்கலுக்கு தண்ணீர் சாப்பாடு எதும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதன் பின் நண்பர்கள் அளித்த தகவலை அடுத்து பாஸ்கலின் தந்தை வெளியுறவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன் பின் சுவிஸ் அதிகாரிகள் ருமேனியா தூதரக பிரதிநிதிகளிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். மொத்தம் 40 மணி நேரம் தடுப்புக்காவலில் இருந்த பாஸ்கல் அதன்பின் சுவிஸ் திரும்பியுள்ளார். முறையான பாஸ்போர்ட் இல்லாமலே அவர் ஏதென்ஸ்க்கு தனது நண்பர்களிடம் வந்து சேர்ந்துள்ளார். ஞாயிற்றுகிழமை என்பதால் அவரால் முறையான பாஸ்போர்ட் பெற முடியவில்லை. இதிலிருந்து அவர் கற்று கொண்ட பாடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்வது நல்லது அல்ல என்பதே. மேலும் வெளிவிவகார அலுவலகம் இது போன்று இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அவர்கள் அறிவுரை கூறினார்கள்.