ஆபத்தை உணராமல் அணையில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த அணையில் படகு சவாரி செய்வோருக்கு ஏற்கனவே வழி இருந்ததாகவும், தற்போது அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்ட போதிலும் பாதை முழுமையாக மூடப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி செல்பி எடுப்பதினால் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.