Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. திரும்பும் இயல்பு வாழ்க்கை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சுற்றுலா தளமானது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

மேலும் வியாபாரத்தை நம்பி இருக்கும் கடைக்காரர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கண்காணிப்பு குழுவை நியமித்து முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |