தான்சானியாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சுற்றுலா பயணி சிங்கத்தை தொட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தான்சானியா நாட்டில் இருக்கும் Serengeti என்ற தேசிய பூங்காவில் ஒரு ஜீப்பில் சுற்றுலா பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அந்த ஜீப், சிங்கத்தின் அருகில் சென்று நிற்கிறது. அந்த நேரத்தில் ஜீப்பில் இருந்த ஒரு பயணி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளார். அதன்பின்பு, பெண் பயணி ஒருவர், தன் கையை வெளியில் நீட்டி சிங்கத்தின் முதுகில் கை வைத்து தடவிவிட்டுருக்கிறார். அதனை ஒரு நபர் புகைப்படம் எடுக்க முயற்சிக்கிறார்.
கோபமடைந்த சிங்கம், அவரை பார்த்து முறைத்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன சுற்றுலாப்பயணி ஒருவர், ஜன்னலை அடைத்துவிடுங்கள் என்று கத்தியுள்ளார். அவர், ஜன்னலை அடைப்பதற்குள், சிங்கள் ஆக்ரோஷமாக கர்ஜித்துள்ளது. இதனால், புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவர் பயந்துபோய் கேமராவை கீழே போட்டுவிட்டார்.