நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
அங்கு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல் கொடைக்கானலில் நேற்று காலையிலிருந்து குளிர்ச்சியான காற்று வீசயும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை ரசித்தபடி பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரியை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஏரியை சுற்றி சைக்கிள் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.