நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் அதிக அளவில் வருகை தந்துள்ளன இதனால் கொடைக்கானலே களைகட்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே வரத்தொடங்கியுள்ளன. சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தந்துள்ளதுதால் அனைத்து சுற்றுலா இடங்களும் களைக்கட்டியுள்ளன.
பசுமை பள்ளத்தாக்கு, ஏரிக்காடு, பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக், குணா குகை, ஏரிச்சலை ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு பொழுது போக்கிக் கொண்டனர். மேலும் சாலையில் சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அங்கு வெண்மேக கூட்டங்கள் கடல் அலைகள் போல் தரம் இறங்கியது சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவர்ந்திழுக்க செய்தது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் கொடைக்கானல் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.