அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு உத்தரவிவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இது குறித்த சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் , இது குறித்து புகார் தெரிவிக்க அடுத்த 8 வாரத்துக்குள் கட்டணமின்றி இலவச தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.