கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எடமலக்குடி என்ற கிராமத்தில் ஒருவருக்கு கூட தற்போது வரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறும்போது நாங்கள் தங்களுக்காவே சுயமாக ஊரடங்கு விதித்து கொண்டும், வெளியாட்கள் யாரும் கிராமத்திற்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாட்டை உருவாக்கினோம். மேலும் எங்கள் கிராமத்தில் இருந்து யாராவது வெளியில் சென்றாலும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். அதுமட்டுமில்லாமல் நாங்கள் எங்கள் ஊரில் விளையும் காய்கறிகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
எங்கள் கிராமத்துக்கு என்று சாலை இல்லை. கடந்த ஆண்டு நடந்த நிலச்சரிவு காரணமாக இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. எங்க கிராமம் தனித்து விட்டதுபோல் தனியாக அமைந்துள்ளது. இதனால் நாங்கள் எங்களுக்காகவே ஊரடங்கு போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் எங்களது கிராமத்தில் சுத்தமான ஆக்சிஜன் நிரம்பிய காற்று கிடைக்கின்றது. இதனால் நாங்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அம்மாநில சுகாதார அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.