Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலுக்கு தேவையான…. நச்சுனு நாலு டிப்ஸ்… இதோ..!!

பெண்களுக்கு உதவும் வகையில் சில சமையல் குறிப்புகளை பார்ப்போம்.

முதலில் அரிசி கலைந்த பிறகு மீண்டும் இரண்டாவது முறை கழுவும் நீரை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் பி1 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம்.

மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.

தொவரம்பருப்பு  வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து வேக வைத்தால் சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சியை தரும் .

குலோப்ஜாமுன் ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

Categories

Tech |