இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த புதிய யாரிஸ் ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், குரோம் கிரில், ORVMகள், 15-இன்ச் சில்வர் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காரின் உள்புறம் டூயல்-டோன் கேபின், வாட்டர்ஃபால் டிசைன் கொண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்,
4.2 இன்ச் TFT கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, கூல்டு கிளவ்-பாக்ஸ், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஏர்-வென்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரிஎண்ட்டில் பாதுகாப்பிற்காக ஏ.பி.எஸ், இ.பி.டி, பிரேக் அசிஸ்ட், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், 3 ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேரிஎண்ட்டில் உள்ள என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இதனுடன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு சி.வி.டி.-ஐ ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த புதிய வேரிஎண்ட்டின் விலை ரூ. 9.63 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.