Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரை பிரிப்பதால் என்ன பலன்” TR பாலு கேள்வி …!!

காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் TR பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ யை இரத்து காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து.இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இதற்கான ஒப்புதல் பெற இந்த மசோதா தாக்கல் செய்தது. இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது பேசிய அவர்நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஏன்? விவாதித்த பின்னரே குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் , காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து அங்குள்ள காஷ்மீர் சட்டபேரவை ஆலோசிக்காமல் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது ,  பெரிய மாநிலமான ஜம்மு காஷ்மீரை நகராட்சியாக மாற்றுகிறது மத்திய அரசு.மத்திய அரசு நியமிக்கும் ஆளுநரால் காஷ்மீரின் அன்றாட நிர்வாகத்தை சரியாக நடத்த  முடியாது. எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்று TR பாலு குற்றம் சாட்டினார்.

Categories

Tech |