Categories
மாநில செய்திகள்

ரயில் பாதை பராமரிப்பு பணி…. 6 விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.5 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டை மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் காலை 7 மணி விரைவு ரயில் வருகின்ற 18ஆம் தேதி விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும்.மதுரை மற்றும் செங்கோட்டை இலையே இயக்கப்படும் விரிவுரையில் வருகின்ற 18ஆம் தேதி விருதுநகரில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் மற்றும் கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகின்ற 18ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும்.அதனைப் போலவே கோவை மற்றும் நாகர்கோவில் காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வருகின்ற 18ஆம் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |