லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஞானசேகர். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் பெரும்புலியூர்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் டிராக்டரில் இருந்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஓச்சேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த ஞானசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞானசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.