Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வண்டியை கழுவ சென்றோம்…! தலைகுப்புற கவிந்துடுச்சு… தி.மலை சம்பவத்தில் உயிரிழப்பு …!!

கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி. தாங்கல் மலையின் மீது கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த குவாரி செயல்படவில்லை. அங்கு ஜல்லி உடைக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது அதனை குன்னத்தூரில் வசித்து வரும் சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலாஜி நகரில் வசித்துவரும் முனுசாமி என்பவர் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை இந்த கல்குவாரி பள்ளத்தின் அருகே ஓட்டி சென்றார். அவருடன் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் அழகேசன் என்ற ஜல்லி நிறுவன ஊழியரும் சென்றார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி ட்ராக்டர் அந்த கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்தது .இந்த விபத்தில் டிரைவர் முனிசாமி டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டிராக்டரை கழுவுவதற்காக ஓட்டி சென்ற போது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தினுள் கவிழ்ந்தது என போலீசாரிடம் அழகேசன் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |