நாமக்கல் மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஏறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள செக்காரப்பட்டி என்ற கிராமத்தில் குப்புசாமி(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லாபாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்ற குப்புசாமி டிராக்டரில் இருந்து கோழிகளுக்கான தீவனங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் பின் நோக்கி நகர்ந்துள்ளது.
இதனையடுத்துகுப்புசாமி டிராக்டருக்கு அடியில் கல்லை வைத்து நிறுத்தும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் அவர் மீது ஏறியுள்ளது. இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த குப்புசாமியை அங்கிருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.