சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவூர் ஆதிதிராவிடர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விவேக் அவரது ஊரில் இருந்து கொல்லாங்கரை நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லாங்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, குறுக்கே ஒரு மாடு வந்ததை கண்ட விவேக் மாட்டின் மேல் டிராக்டர் மோதாமல் தடுப்பதற்காக டிராக்டரை நிறுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விட, அதன் அடியில் விவேக் சிக்கிவிட்டார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் விவேக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.