Categories
உலக செய்திகள்

இவருடைய ஆட்சியில் இதுவே முதன்முறை..! பிரபல நாடுகள் வர்த்தக விவாதம்… அறிக்கையில் வெளியான தகவல்கள்..!!

முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஜோ பைடன் ஆட்சியில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பணியாற்றியபோது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்றுள்ளது. சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. உலகமெங்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையை சீன பிரதமர் லியு ஹீயும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேதரின் தையும் காணொலி காட்சி வழியாக நடத்தியுள்ளனர். இரு தரப்பினரும், இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவின் முக்கியத்துவம் குறித்து விவாதித்துள்ளனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் இது குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீன துணைப்பிரதமர் லியு ஹீயும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேதரின் தையும் சீன, அமெரிக்க உறவைப்பற்றிய தொடர்ச்சியான மறு ஆய்வு மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தின் தொழிலாளர்களை மையப்படுத்திய வர்த்தக கோட்பாடுகளின் வழிகாட்டுதல் கொள்கைகள் குறித்து விவாதித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும்
பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தொடர்வது என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |