Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை ஆபாசமாக திட்டியதால்… ஊழியருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மனைவியை ஆபாசமாக திட்டியதால் போக்குவரத்து அலுவலக ஊழியரை 2 பேர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேஷை 2 மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் காயமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சுரேஷ் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் மதன்குமார் மற்றும் காஞ்சிபுரத்தில் வசிக்கும் சந்துரு ஆகிய 2 பேரும் சுரேசை அடித்து உதைத்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கைதான மதன் குமாரின் மனைவி சந்தியா என்பவர் வேலை பார்ப்பதும், சந்தியாவை சுரேஷ் ஆபாசமாக திட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த மதன்குமார் தனது மைத்துனரான சந்துருவுடன் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |