உணவு மற்றும் தண்ணீரை தேடி வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் ஆனைகட்டி அருகில் இருக்கும் செங்கல் சூளைக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துவிட்டது.
இதனை பார்த்ததும் தெருநாய்கள் குறைத்ததால் காட்டு யானை மிரண்டு சாலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் காட்டு யானைகளை பார்த்ததும் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டனர். அதன் பின் சுமார் ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.