வால்பாறை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர கடைகளை திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த பொதுமக்களை காவல்துறையினர் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு தடை விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கும் தடை விதித்துள்ளனர். ஆனால் நீரார் அணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் திரண்டனர்.
இதனையடுத்து கட்டுப்பாடுகள் குறித்து சரியாக தகவல் தெரியாத உரிமையாளர்கள் தங்களது கடைகளை திறந்து வைத்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகஅளவில் காவல்துறையினரை நியமிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.