Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே நின்ற கூட்டம்…. மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேன்…. ஸ்தம்பித்த சாலை போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் வாகனம் தாறுமாறாக ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதால் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அரசியல் கட்சி வேட்பாளரின் வரவேற்பு நிகழ்ச்சிக்காக பழைய பேருந்து நிலைய பகுதியில் ஏராளமான தொண்டர்கள் நின்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தொண்டர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேனில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேனை மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |