Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அவங்களை அங்கேயே திரும்ப அனுப்புங்க” வளைவில் நகர முடியாமல் நின்ற லாரி…. கடும் கோபத்தில் வாகன ஓட்டிகள்….!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை ஆனது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் பாரம் தாங்காமல் சில வாகனங்கள் கவிழ்ந்து விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகுவிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரத்துண்டுகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் 26 வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்ப முடியாமல் நின்றதால் நான்கு மணி நேரம் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்ட பிறகு போக்குவரத்து சீராகி 4 மணி நேரமாக நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இது குறித்து பயணிகள் கூறும்போது, ஆசனூர் சோதனை சாவடியிலேயே அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்ப வேண்டும் எனவும், அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |