Categories
தேசிய செய்திகள்

இந்து பெண்ணை மணந்த…. இஸ்லாமிய வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கண்டித்த நீதிமன்றம்…!!

இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞரை போலீசார் சிறையில் அடைத்ததை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் வசிப்பவர் இந்து பெண் பிங்கி(22). இவர் ரஹீத் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது திடீரென்று அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இவர்களது திருமணம் லவ் ஜிகாத் என்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிங்கியை பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிங்கியின் கணவர் மற்றும் மைத்துனரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக புதிய சட்டத்தின்படி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியபோது முராதாபாத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம், பிங்கி தான் விருப்பப்பட்டுதான் ரஹீத்தை திருமணம் செய்ததாகவும், மேஜர் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட நீதிமன்றம் அவருடைய கணவர் வீட்டிற்கு பிங்கியை செல்ல அனுமதித்துள்ளது. மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |