Categories
மற்றவை விளையாட்டு

பளு தூக்கும் போட்டியின் போது வீரருக்கு நேர்ந்த துயரம்…!!

400 கிலோ எடையுள்ள பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட வீரரின் முழங்கால்கள் ஜவ்வு கிழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்பவர், 400 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்டார். 400 கிலோ எடையுள்ள கல்லை தூக்கும் போது முழங்கால் முறிந்ததால் அலெக்சாண்டர் வலியில் துடித்தாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப் தசைகள், முழங்காலில் சவ்வுகள் இணைய 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து மருத்துவர்கள் அவரை இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மீண்டும் நடக்கும்போது கால்களை வேகமாக அசைக்காமல் நடக்க வேண்டி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் பழையபடி பழுத்துக்க முடியுமா என்பது இரண்டு மாதத்திற்கு பிறகே தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |