Categories
உலக செய்திகள்

துனிசியா நாட்டில் சோகம் …. படகு மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி …!!

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள்  சிலர்  ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Image result for More than 80 migrants feared drowned off Tunisia coast

மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு கொண்டு வர முடிந்தது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நீரில் மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக  தெரிகின்றது.

Categories

Tech |