Categories
உலக செய்திகள்

மணமேடையில்… திடீரென சரிந்த மணப்பெண்… பின் அதிர்ச்சியடைந்த கணவர்..!!

இஸ்ரேலில் திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் மணமேடையில் மாரடைப்பால் சரிந்து விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 

இஸ்ரேலில் மருத்துவரான இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமண நிகழ்ச்சியின்போது கணவருடன் மணமேடையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே சுருண்டு விழுந்து இருருக்கிறார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவர்களான அப்பெண்ணின் நண்பர்கள் உடனடியாக அவருக்கு CPR என்னும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்..

பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததால் கணவர் உட்பட பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நெகேவ் (Negev) என்ற பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய அந்த இளம்பெண் தற்போது மிகவும்  கவலைக்கிடமான நிலையில் இதய சிகிச்சை துறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..

Categories

Tech |