சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கி, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளை இணைக்கும் 80 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு அந்நாட்டின் சுதந்திர தின விழாவன்று அங்கிருந்தும் துருக்கி மற்றும் ஈரான் நாட்டை இணைக்கும் சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இறுதியாக 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 8 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 10 வருடங்கள் கழித்து மேல் குறிப்பிட்டுள்ள 3 நாடுகளை இணைக்கும் 80 ஆயிரம் டன் வரையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லக் கூடிய ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை விழாவில் உஸ்பெகிஸ்தான் உட்பட பல முக்கிய நாட்டின் தூதர்கள் பங்கேற்றுள்ளார்கள். மேலும் இந்த சரக்கு ரயில் சேவை வான்வெளி போக்குவரத்தை விட மிகவும் விரைவானதாகவும், சிக்கனமானதாகவும் உள்ளது.