Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. சுதாரித்து கொண்ட இஞ்சின் டிரைவர்…. அச்சத்தில் மூழ்கிய அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம்புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் பகுதியில் உள்ள மேல பக்கம் அருகே வளைவில் திரும்ப முயலும் போது ரயிலின் 25 மற்றும் 26 ஆவது பெட்டிகளில் உள்ள சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது.

திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளதால் எஞ்சின் டிரைவர் கவனமாக ரயிலை நிறுத்தியுள்ளார். உடனே அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒரு வாரத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம்புரண்ட சம்பவம் ரயில்வே அதிகாரிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரக்கோணம் பகுதியில் தண்டவாளத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |