தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.