Categories
உலக செய்திகள்

தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில்…. அம்மோனியா வாயு வெளியேறி 51 பேருக்கு மூச்சுத்திணறல்…!!!

செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு  வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று  தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் சுவாசக்கோளாறு ஏற்பட்டு மூச்சுத்திணறலில் தவித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |