ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மொரப்பூர் அருகே இருக்கும் வேட்ரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மொரப்பூர் வந்துள்ளார். பின்பு அங்கிருந்து வேட்ரப்பட்டி செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று முருகன் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.