சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் கடந்த 29 ஆம் தேதி இரவு ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த சரக்கு ரயில் சுரேஷ்குமார் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸ் தண்டாயுதபாணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.