கடையை திறப்பதற்காக வந்த வியாபாரி ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை குடியாத்தம் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தவர் சீனிவாசன். இவர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அப்பகுதியிலுள்ள குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.