கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்த பொழுது ரயில் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் மிதுன் இவர் திருநின்றவூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற மிதுன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.