அமெரிக்காவில் ரயில் ஒன்று வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள தெற்கு கரோலினா என்னும் மாகாணத்தில் இருக்கும் வடக்கு சால்ஸ்டன் என்ற பகுதியில், ஒரு வாகனத்தில் நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். அப்போது அந்த வாகனம் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றிருக்கிறது. அந்த சமயத்தில் ரயில் ஒன்று எதிர்பாராமல் அந்த வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மீதமுள்ள ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த ரயிலில் 500 பயணிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த விபத்தில் ரயிலில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.