Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இறை தேடி வந்த மான்…. விரைவாக வந்த ரயில்…. கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்….!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டது. இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மானை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் “இந்த பகுதியில் அடிக்கடி வெறி நாய் கடித்தும் ரயிலில் அடிபட்டும் வாகனங்களில் அடிபட்டும் புள்ளி மான்கள் பல இறக்க  நேரிடுகிறது. இதனால் இப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும்” என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |