Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”…. ரயிலை பாதியில் நிறுத்திவிட்டு தயிர் வாங்கப் போன ஓட்டுனர்…. அடுத்து நடந்தது என்ன….?

பாகிஸ்தானில் ரயிலை பாதி வழியில் நிறுத்தி விட்டு தயிர் வாங்கச் சென்ற ஓட்டுனரின் வேலை பறிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரிலிருந்து, கராச்சிக்கு சென்ற இன்டர்சிட்டி ரயில், திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. எதற்கென்று, பயணிகள் பார்த்தபோது, ரயில் ஓட்டுனர் இறங்கி தயிர் பாக்கெட் வாங்க சென்றிருக்கிறார். அதன்பின்பு, தயிர் பாக்கெட்டுடன் வந்து, மிகச்சாதாரணமாக மீண்டும் ரயிலை இயக்கியிருக்கிறார்.

அப்போது சிலர், ஓட்டுனர் தயிர் வாங்க சென்றதை வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டனர். வீடியோவைப் பார்த்த பலரும் அந்த ஓட்டுனரை வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில், வைரலாக பரவிய அந்த வீடியோவை பார்த்த பாகிஸ்தானின் ரயில்வே துறை மந்திரியான அசாம் கான், உடனடியாக அந்த ரயில் ஓட்டுனரை பணி நீக்கம் செய்தார். மேலும், அந்த ரயிலின் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |