மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது ரயில் வரும் சமயம் பார்த்து ஒரு பெண் தண்டவாளத்தை நோக்கி திடீரென்று குதித்துள்ளார். இதைக் கண்ட காவலர் உடனடியாக அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மறுபுறம் இழுத்துச் சென்று காப்பாற்றினார். இதையடுத்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் முதல் கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.