அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை அருகில் ரயிலில் அடிபட்டு அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார் என்றும், அவரின் மற்ற விவரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.