Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறையான பராமரிப்பு இல்ல…. தடம் புரண்ட சரக்கு ரயில்…. நிர்வாகம் மீது பொதுமக்களின் குற்றசாட்டு….!!

சிமெண்ட்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு லாரி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிமெண்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மதுக்கரை சிமெண்ட் ஆலை நோக்கி கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் சென்ற போது, திடீரென ரயில் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த இரண்டு கேட்டை உடைத்துக் கொண்டு தாறுமாறாக ஓடிய ரயில் தடம் புரண்டு விட்டது. இதனை அடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் முறையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இந்த விபத்திற்கான காரணம் என அப்பகுதி மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |