ஆல்ப்ஸ் மலையின் இடையில் செல்லக்கூடிய சுரங்க ரயில் பாதை ஒன்றில், ரயில் பழுதடைந்ததால் 600 பயணிகள் மாட்டிக்கொண்டனர்.
Gotthard சுரங்க ரயில் பாதையில் நேற்று இரவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பாதி வழியில் ரயில் பழுதடைந்து நின்றிருக்கிறது. இதில் 600 பயணிகள் பரிதவித்து நின்றுள்ளனர். எனவே பயணிகள் அனைவரையும் இறங்குமாறு அறிவுறுத்தி சுரங்க பாதைக்கு வெளியில் அழைத்துச்செல்ல தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில், நல்லவேளையாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. அதன் பின்பு சுமார் 9:30 மணிக்கு ரயில் சேவை, இயல்பு நிலைக்கு திரும்பியது. எனவே ரயில் பழுதடைந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.