லண்டனில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி லண்டன் எலிபண்ட் மற்றும் கேஸ்டில் இரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த ரயிலின் மீது விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தற்கொலை செய்து கொள்வது தவறு என்பதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரின் பெயர் மற்றும் தகவல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பெயர் ஜோசப் என்றும் அவர் இறப்புக்கான மருத்துவ காரணம் 1பி என்றும் ரயில் விபத்தால் ஏற்பட்ட காயங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.