Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தளர்வுகள் அறிவிப்பு…. ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்…. அறிவித்தது மதுரை கோட்ட நிர்வாகம்….!!

ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2  ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மதுரை கோட்டை ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுகள் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கோட்ட ரயில்வே கோட்ட முன்பதிவு மையங்கள் அனைத்தும் 9ஆம் தேதி வழக்கம் போல செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் முன்பதிவு மையங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை ரத்து செய்வது மிகவும் நல்லது எனும் ரயில்வே துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |